விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் விலங்குகளின்  திசுக்களை பயன்படுத்தி நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் (Thoracoscopy And Pleural Insights and Guide) பற்றி விளக்கப்பட்டன. இக்கருத்தரங்கு நுரையீரல் மருத்துவர்களுக்கும் மற்றும் இத்துறை சார்ந்த முதுநிலை கல்வி பயின்றோருக்கும் நடத்தப்பட்டது. பயிலரங்கில் விலங்குகளின்  திசுக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

(Thoracoscopy) தோராக்கோஸ்கோபி என்பது உட்புற பரிசோதனை, பயாப்ஸி மற்றும் பற்சிகர வளைவு மற்றும் தோராசிக் குழிக்குள்ளான நோய்களின் மருத்துவ செயல்முறை ஆகும்) பரிசோதனை முறையானது, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பயன்பட கூடிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை  என்று டாக்டர் எஸ் சாந்தகுமார் மற்றும் டாக்டர் ஜெ வேணுகோபால் தெரிவித்தனர். இந்த மருத்துவ தொழில் நுட்பத்தில் வைக்கும் நம்பிக்கை வளரும் நுரையீரல் மருத்துவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு கருவியாகும் என்று கூறினர்.

டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறியதாவது:  நுரையீரல் சிகிச்சை துறையில் தொடர்ந்து  புதுமைகளை புகுத்துவதில் கே.எம்.சி.எச் மருத்துவமனை பெருமை கொள்கிறது. நுரையீரல் இயல் துறையில் மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்வதற்காக இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.