HAPPY ENGINEER’S DAY

Every Year, September 15 is celebrated as Engineer’ Day in India to cherish the birth anniversary of  Sir.M.Visvesvaraya – a marvelous civil engineer who made great innovation and gave himself to build a better India. Eminent personalities belonging to Engineering field and industries spoke to The Covai Mail about the value this field and engineers adds to society and country.

Engineering converts Science into Technology

-A.V.Varatharajan, Chairman, Sandfits Foundries.

Inventions emerge out of scientific researches, and it is the field of Engineering that converts Science into Technology. By application of engineering, the benefit of inventions have been reaching the masses and making life better.

Such is the power this field and engineers hold, and on this wonderful day, I wish all the engineers, engineering teachers and inventors a very Happy Engineers Day.

Engineers are our society’s backbone

  • Jayabal, Renowned Engineer.

Engineers play an important role in all aspects of our lives. We can call them as the backbone of our society. Wonderful engineering works are being done by people who don’t have formal engineering education. They contribute to the society through their experience and involvement.

For our nation’s development in all fronts, we need engineers. In Tamil Nadu there are more than 500 engineering colleges and approximately 1 to 2 lakh new engineers enter the field. Tamil Nadu is in need quality engineers.

Colleges should facilitate interaction between Students and Experienced & Practicing engineers, make them deliver lectures, so that the quality of students will improve which will in turn lead to employable engineers in the country.

Mechanized Civil Engineering Concepts can provide better solutions

– R.Karunanidhe, President, CEBACA

The whole of Civil Engineering fraternity is proud that our nation cherishes the birth of Sir.M.Visvesvaraya, who was a Civil Engineer, as Engineer’s Day.

If we who belong to the Civil-Department could take up the strategies such as Timely-Delivery, Quality and Cost-Effectiveness, we have no doubts that Indian construction field will emerge as a solid competitor to others across the globe and we will be able to realize the dreams of Sir Visvesvaraya and fulfill our Prime Minister’s Vision.

By the efforts of Tamil Nadu government, many investors are going to enter the State. Smart City projects will take place in many other States and together these will provide lots of construction related job opportunities. We recommend the implementation of Mechanized Civil Engineering concepts to provide better outcomes for future projects.

Here we would like to underline that during COVID-19 outbreak, the recognized construction organizations were able to send their guest-labours/migrant labours home safely with the support of Government.

The suffering of migrant labours came chiefly because of the unrecognized construction organizations who were unable to protect them. We would like to tell the government that only if the recognized construction organizations operate in the country, we can make this field function at its best for all who need its service.

பொறியாளர்கள் சமூகத்தின் வேர்கள்

D.நந்தகுமார், நிர்வாக இயக்குநர்,

செல்வம் ஏஜென்சிஸ்

இயற்கையான உலகம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், இப்போது நாம் காண்கின்ற இந்த நவீன உலகம் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. நாம் தற்போது அனுபவித்து வரும் சாலை, ரயில், விமான போக்குவரத்து தொடங்கி, தகவல் தொழில்நுட்பம், செல்போன், செவ்வாய் கிரகம் வரை, மருத்துவ உபகரணங்கள் தொடங்கி கல்வியியல் கருவிகள் வரை அனைத்துமே பொறியாளர்களால் உருவாக்கப்பட்டவை தான்.

மண்ணுக்கு அடியில் உள்ள வேர்கள், ஒரு மரத்தைத் தாங்குவது போல பொறியாளர்கள் இந்த மாபெரும் சமூகத்தின் வேர்களாக பரவி இருந்து சத்தமில்லாமல் சாதனை செய்து வருகிறார்கள். இன்னும் வரும் எதிர்காலத்திலும் இந்த உலகை இயக்குவதில், மனிதர்களின் வாழ்வில் வசதிகளைப் பெருக்குவதிலும், பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்தியா எதிர்க்காலத்தில் வல்லரசாவதற்கும் தற்சார்பு பெற்று திகழ்வதற்கும் பொறியாளர்களின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகும்.

கோவையின் தொழில் முன்னேற்றத்திற்கு பொறியாளர்களின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதோடு, பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை நினைவு கூறுவது இந்த தருணத்தில் அவசியம். அனைவருக்கும் தேசிய பொறியாளர்கள் தின வாழ்த்துகள்!

புதிய உத்திகளை கையாண்டு நாமும் வல்லுநர்கள் என்பதை நிரூபிப்போம்

k.பன்னீர் செல்வம்,

தலைவர்,பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

செப்டம்பர் 15 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. மறைந்த பொறியாளர் விசுவேசுவரய்யா, கர்நாடகாவில் 1860ல் பிறந்து, பொறியாளராகி மிகப்பெரிய அணைகள்,  கட்டிடங்கள் மற்றும் வியக்கத்தக்க வகையில் அணைகளில் தானியங்கி கதவுகள் அமைத்து உலகளவில் கட்டுமான துறையை உயர்த்திய பெருமை இவரை சேரும்.

அவரது வழியில் அனைத்து பொறியாளர்களும் உழைத்து கட்டுமான துறையில் புதிய உத்திகளை கையாண்டு உலகலவில் நாமும் பொறியியல் துறையில் வல்லுநர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம் என்று உறுதி ஏற்று அனைத்து பொறியாளர்களுக்கும்  பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கோவை மையத்தின் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இயற்கையோடு தொழில்நுட்பமும் மனிதர்களுக்கு சேவை செய்யும்

இயகோகா சுப்ரமணியம்,

தலைவர், நன்னெறிக் கழகம்

பொறியியல் தொழில்நுட்பம் என்பது இந்த மனித குல வளர்ச்சிகளுக்கு இன்றியமையாத ஒன்று. உலகமயமாக்கலுக்கு பின்பும், கணினி தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகும் ஏற்பட்ட இதன் வளர்ச்சி மகத்தானது.

இன்று மனிதன் மனிதனை பார்க்காமலேயே, தன்னுடைய வாழ்க்கையைக் கட்டமைத்து கொள்ளும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்ந்துவிட்டது. வெறும் நூலிழையை விட மிக நுட்பமான ஒரு சிப்பில் ஒரு முழு இதயத்தை இயக்கக் கூடிய, உலகத்தையே ஆட்டிவைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

இந்த தொழில்நுட்பம் மகத்தான கல்வி, அதன் பின்னணியில் இருக்கும் மாறுபட்ட சூழ்நிலை ஆகியவை இணைந்து தான் இந்த அளவிற்கு முன்னணியில் வைத்திருக்கிறது. எல்லைப் போரில் கூட மனிதர்களை விட இயந்திரங்கள் தான் ஒன்றை ஒன்று மோதிக்கொள்கின்றன. இதில் பயன்படுத்தக் கூடிய இயந்திரங்களும், தொழில்நுட்பமும் பொறியியல் அடிப்படையில் உருவானவை.

அதே சமயம் இந்த பொறியியலில் வளர்ச்சி என்பது இயற்கைக்கு எதிராகவும், மனித குல வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் எதிராகவும் மாறாமல் இருக்க வேண்டும். அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்து விடவும் கூடாது.

விஞ்ஞானம் மிக உயர்ந்தது. அதேசமயத்தில், இறைவன் படைத்த இந்த படைப்பு, இயற்கையோடு இந்த தொழில்நுட்பம் புதிய பரிணாமத்தில் மனித குலத்திற்கு சேவை செய்யும். எதிர்கால தலைமுறை அதனை நிச்சயம் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

மனித வாழ்வை எளிமைப்படுத்தியதில் பொறியாளர்களின் பங்கு அளப்பரியது

S.நடராஜன், டைனமிக் மல்டி மெட்டல்

என்னுடைய கணிப்பு முதல் பொறியாளர் சக்கரத்தை கண்டுபிடித்தவர். அன்று தொடங்கி இன்று வரை மனித வாழ்வின் மாபெரும் கொடையாளர்கள் பொறியாளர்கள்.

மனித வாழ்வை எளிமைப்படுத்தியதில் அவர்களின் பங்கு அளப்பரியது. அன்றாட வாழ்வில் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நிமிடமும் தொழில்நுட்பம் மனித வாழ்வில் தேவைப்படுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தை நம்மிடையே கொண்டுவந்து சேர்க்க ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பொறியாளர்கள் உலகம் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த 100 வருடங்களில் உலகம் இந்த அளவுக்கு நவீனமாக, பிரம்மாண்டமாக முன்னகர மாபெரும் கட்டமைப்புகளை பெற்றிட, பெரும் சவால்களை சுலபமாக்கி சாமானியன் வாழ்வை உள்ளங்கையில் கொண்டுவந்த பெருமை அவர்களையே சாரும்.

இந்தியாவின் பெரும் கட்டமைப்புக்களை குறிப்பாக கர்நாடகத்தை முன்னேற்றிய பெருமை கொண்ட விஸ்வேஸ்வரய்யா அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் இந்த பொறியாளர்கள் தினம் எங்களைப்போன்ற இந்தத் தொழில் நகரத்தில் பொறியாளர்கள்  மத்தியிலேயே வாழ்ந்து அவர்களை நம்பி அவர்களை சார்ந்து தொழில் செய்யும் எங்களைப் போன்றவர்கள் இந்த தினத்தில் அவர்களுக்கு எங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.