எந்த பொருளுக்கும் நல்ல விளம்பரம் தேவை

கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் (சி.எம்.ஏ) சார்பில், மேலாண்மை கல்லூரி மாணவர்க ளுக்கான கருத்தரங்கம் பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆரா ய்ச்சி இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு ஆசியா ஓ அண்ட் எம் இந்தியா விளம்பர நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் படைப்பு இயக்குனர் பியூஸ் பாண்டே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.நாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: பியூஸ் பாண்டே அவர்கள் சிறந்த விளம்பர படங்களை எடுப்பதில் வல்லவர்.
விளம்பர நிறுவனங்களுக் கெல்லாம் குருவாக திகழும் இவரை இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு பொருளை விற்பனை செய்ய, தரமான தயாரிப்பு, நல்ல நிர்வாகம், அனுபவமிக்க தொழிலாளர்கள் இவை அனைத்தையும் தாண்டி, சந்தைப்படுத்துவதற்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் இன்று முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனை சிறப்பாக செயல்படுத்தி வருபவர் பியூஸ்பாண்டே அவர்கள்தான். இவர் மாணவர்களுக்கு வழங்கிய சிறப்புரை எதிர்காலத்தில் நிச்சயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.