அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து அழைப்பு

  • சுந்தர் முருகானந்தன், நிர்வாக இயக்குநர், வெர்சா டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட்

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி அடிப்படைத் தேவையாக இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்  அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்சமயம் சூரிய சக்தி மூலம் முழுமையான மின்சக்தியைப் பெறுவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் மின்சாரத்தைக்கூட சரிவர சேமிப்பது இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

24 மணி நேரத்தில், ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றால், பல சிரமங்களுக்கு ஆளாகிறோம். கடந்த ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தான் மின்சாரம் வழங்கப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்த குடும்பங்கள் என நமது சமூக, பொருளாதார அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது. அப்போது உண்மையாக உணரப்பட்டது மின்சாரத்தின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்று. ‘மின்சாரத்தை சேமியுங்கள்’ என்று அரசாங்கம் எவ்வளவு முறைதான் கூறினாலும், அதனைத் துளிகூட பொருட்படுத்தாமல், செய்த தவறையே மீண்டும், மீண்டும் செய்து வருகின்றனர் நம் மக்கள். ஏன் மின்சாரத்தை சேமிப்பதில் இவ்வளவு தடுமாற்றம் என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்தால், அவை மக்களின் அலட்சியப்போக்கால்தான் நிகழ்கின்றன என்பது தெரிய வருகிறது.

சரி, வீட்டில் உபயோகப்படுத்தும் இயந்திரங்களால் எப்படி மின்சாரத்தை சேமிப்பது?

பொதுவாக, நம் வீடுகளில் உள்ள மின்சாரத்தால் இயங்கும் பொருட்கள்: டிவி, குளிர்சாதனப் பெட்டி, ஃபேன், வாஷிங்மெசின், மிக்ஸி, கிரைண்டர், அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், ஏசி .உள்ளிட்டவை. சிலர் இவற்றை அவரவர் தகுதிகளுக்கேற்ப, வசதிக்கேற்ப பயன்படுத்துகின்றனர்.  இதில் பெரும்பாலானோர் அத்தியாவசியப் பொருளாக உபயோகிப்பது மின்விசிறி (பேன்). என்றாவது, மின்விசிறியை உபயோகிப்பதனால் எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்று யோசித்து இருக்கிறோமா? நாம் உபயோகிப்பதிலேயே அதிக மின்சாரம் செலவிடுவது மின்விசிறிக்குதான். இதனை ஆய்வின் மூலம் நிரூபித்தும் உள்ளனர்.

மின்விசிறியினால் அதிகமாக செலவிடப்படும் மின்சாரத்தை எப்படி சேமிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது, 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ‘‘டுயூபான்ட் கம்பெனி’’யிடம் ‘‘Global Sustainability Award’’ பெற்ற வெர்சா டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சுந்தர் முருகானந்தன் பற்றி அறிந்தோம். தற்பொழுது மின்சாரத்தைவிட வேகமாக விற்பனையாகி வரும் ‘சூப்பர் ஃபேன்’ என்ற மின்விசிறி தயாரிப்பு நிறுவனமான, இந்நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலோடு அந்நிறுவனம் நோக்கி புறப்பட்டோம். ‘சூப்பர் ஃபேன்’ என்றால் என்ன ஸ்பெஷல் என்று தெரிந்துகொள்ள முனைந்தபோது, இந்த ஃபேனை உலக மக்கள் அனைவரும் உபயோகிப்பதினால் கிட்டத்தட்ட 70 டெரா யூனிட் மின்சாரத்தை சேமிக்கலாம் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு யுனிட் மின்சாரத்தில் மற்ற ஃபேன்கள் 13 மணி நேரம் ஓடும். ஆனால் சூப்பர்  ஃபேனோ 29 மணி நேரம் ஓடும்.

ஒரு அணுமின் நிலையம் 1000 மெகாவாட்தான் உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த மின்விசிறியை உபயோகிப்பதன் மூலம் பல ஆயிரம் மெகாவாட் சேமிக்க முடியுமா என்ற இன்ப அதிர்ச்சியில் அந்நிறுவனத்தை நெருங்கினோம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத ஒரு தொழிற்சாலைக்கு உண்டான அனைத்து விதிமுறைகளின்படி, நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தை அடைந்தோம்.

உள்ளே நுழைந்தவுடன் இன்முகத்துடன் வரவேற்றார் அதன் நிர்வாக இயக்குநர் சுந்தர் முருகானந்தன். எளிமையான தோற்றம், பேச்சிலே தெளிவுடன் காணப்பட்டார். சூப்பர் ஃபேன் உருவான விதத்தை பற்றிக் கேட்டபொழுது,

‘‘இது தற்செயலாக உருவாக்கப்பட்ட ஒரு சாதனம். அடிப்படையில் எங்கள் நிறுவனம் மோட்டர் கண்ட்ரோல் பொருட்களைத் தயார் செய்து வருகின்றது. மின்னணுப் பொருட்களின் மூலம் மோட்டார்களின் வேகத்தை எங்கு எப்படி கட்டுப்படுத்துவது என்ற தொழில்நுணுக்கமும், தரமான தயாரிப்புகளுமே எங்களுடைய வெற்றி. உதாரணமாக, கண்ட்ரோல் செய்யும் மின்னணுப் பொருட்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். இந்த கண்ட்ரோலர் மின்சாரத்தை சேமிக்கிறது. இதனால், குறைந்த மின்னழுத்தத்தால், லிஃப்ட் பாதியில் நின்று விடுமேயானால், இந்த கண்ட்ரோலர் சேமித்த மின்சாரத்தினால், லிஃப்டை அடுத்தத் தளத்திற்கு கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் கிடைக்கிறது. நாங்கள் தயாரிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, அது பக்க விளைவுகளற்ற மின்சாரத்தை சேமிக்கும் நோக்கத்தில்தான் தயார் செய்து வருகிறோம்.

ஒருமுறை, பெங்களூருக்கு தொழிலதிபர்களின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், உங்கள் தயாரிப்புகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பங்களுடன் சிறந்து விளங்குகின்றன. நீங்கள் ஏன் மின்விசிறியில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தக் கூடாது என்ற ஒரு கேள்வியை முன் வைத்தார். முதலில் மறுத்துவிட்டேன். ஆனாலும் அது பற்றிய என் பங்குதாரர் துர்கா சரண் யோசனை செய்து கொண்டே இருந்தார். அதன் பிறகு ஒரு பத்திரிக்கையில், மின்னணு சாதனங்களான, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்றவைகளின் உபயோகங்களும், அவற்றிற்காக நாம் செலவிடும் மின்சாரத்தின் அளவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், மின்விசிறிக்காகத்தான் அதிக அளவு மின்சாரம் செலவாகிறது எனவும், அதனை நாம் பொருட்படுத்துவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின்னர்  இதில் நாம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என எண்ணி செயல்படத் துணிந்தோம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதன் பயன்கள் கணக்கிடப்பட்டன. எங்களின் இந்த தொழில்நுட்பத்தை இதில் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 16,000 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. மின்சாரத்தை சேமிக்க இதுபோன்ற இயந்திரங்களின் உபயோகத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று எண்ணி தயாரிக்க, அதற்கான பணிகளில் ஈடுபட்டோம்.

சாதாரண மின்விசிறியில் தூண்டுதல் மோட்டார்கள் (Induction Motors) உபயோகிக்கப்படுகிறது. ஆனால் மின்சாரத்தை சேமிக்க BLDC Motor Controller தயாரிப்பு தேவைப்பட்டது. அதைப் பற்றி எங்களுக்கு முன் அனுபவம் இல்லாத சூழ்நிலையில், அவைகளைப் பற்றி தெரிந்து கொண்டு, பல மாதிரிகளுக்கு பிறகு ‘சூப்பர் ஃபேன்’ தயாரித்தோம்.

இதன் அம்சங்கள்:

  1. 50% க்கு மேல் மின்சாரத்தை சேமிக்கக் கூடியது.
  2. உயர்ந்த மற்றும் தாழ்ந்த மின்னழுத்தத்திலும் சீரான காற்று.
  3. ரிமோட் கண்ட்ரோல் வசதி
  4. வண்ண வண்ண நிறங்களில் கிடைக்கக் கூடியது.
  5. மோட்டார் சூடாவதில்லை, அதனால் எப்போதும் குளிர்ந்த காற்று.
  6. 5 வருட உத்திரவாதம்.

இந்த சிறப்புமிக்க மின்விசிறியைத் தயாரித்த பொழுது, பல முன்னணி நிறுவனங்கள் இதற்கு விலை பேச தயாராக இருந்தனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். காரணம் அவர்கள் கூறிய இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று, தயாரிப்பு எங்களுடையது, ஆனால் பெயர் அவர்கள் நிறுவனத்தினுடையது. மற்றொன்று, ஒரு முன்னணி நிறுவனம் எங்களிடம் வந்து குறைந்த ஆர்டர்கள் கொடுத்தனர். அப்போது நான் கேட்டேன், இவ்வளவு சிறப்பு வாய்ந்த, அதுவும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய ஒரு நல்ல பொருளை இவ்வளவு குறைவாக ஆர்டர் செய்ய காரணம் என்ன என்று கேட்டோம். அதற்கு அவர், ‘உங்களின் இந்த தயாரிப்பைக் காண்பித்து விளம்பரப்படுத்தி, மக்களை வரவழைத்து எங்களின் சாதாரண தயாரிப்புகளை நாங்கள் விற்று விடுவோம்’ என்றார்.

அப்பொழுதுதான் முடிவு செய்தோம், இந்த அற்புதத் தயாரிப்பை, அதிமுக்கியமான உற்பத்திப்பொருளை நாமே விற்பனை செய்ய வேண்டும் என்று. மக்கள் அனைவருக்கும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற குறிக்கோள் வேரூன்ற வேண்டும். அதன்மூலமே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் அவர்களை அடையும். ஆனால் இந்த முயற்சிக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பத் துறை சார்பாக ‘‘சிறந்த புதுமையான தயாரிப்புக்கான விருது’’ கிடைத்தது. மேலும் 2015 ஆம¢ ஆண்டு ‘‘டுயூபான்ட் கம்பெனி’’யின் Global Sustainability விருது கிடைத்தது.

இதில் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்களில் மறக்க முடியாத நிகழ்வு என்றால், அது வாஷிங்டன் நகரிலே அமைந்துள்ள ‘வெள்ளை மாளிகையில்’ இருந்து வந்த அழைப்பு. வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், இவ்வுலகில் மின் இணைப்பு இல்லாத 120 கோடி மக்களுக்கு சூப்பர்ஃபேனின் மின் சேமிப்பும், நீடித்த வாரண்டியும் எவ்வாறு உதவுமென்று உரைத்தேன். “எங்களுடைய குறிக்கோள் இந்த நவீன மின் விசிறியின் மூலம் காற்றின் அளவைக் குறைக்காமல், மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்பது தான் என்றேன். உயர்ந்த குறிக்கோளுடன், நாட்டுக்கும், நமக்கும் நன்மை சேர்க்கும் உயர்தர பொருட்களைத் தயாரிக்கும் ஒரு உன்னதமான மனிதரை சந்தித்த சந்தோசத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.

ஊடகங்களின்  மூலமாக பல நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, அவர்களையே முன்னணி நிறுவனங்கள் என நினைத்து அவர்களின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நம் மண்ணில் பிறந்த நம்மில் ஒருவர் தயாரித்த நமக்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருளை வாங்க இப்போதே முன் வரவேண்டும். இந்த சூப்பர் ஃபேன் வாங்குவதன் மூலமாக நாம் நமது சகோதரரின் கண்டுபிடிப்பை அங்கீகரிப்பதுடன், நாட்டின் மின்சாரத்தை சேமிப்பதில் ஓர் குடிமகனாக நமது கடமையையும் செய்ய வேண்டும் என இங்கேகே வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். வெளிநாட்டினர் மதித்து போற்றும்  இந்த அரிய கண்டுபிடிப்பை நமக்காக இந்தியாவில் அதுவும் கோவையில் உற்பத்தி செய்வேன் என்ற உறுதியுடன் இருக்கும் இவருக்கு நாம் மதிப்பளிக்காவிட்டால்  அது வெட்கப்பட வேண்டிய விஷயமாகப் போய்விடும். அதற்கு நாம் இடம்கொடுக்க வேண்டாமே..!

– மேகலா நடராஜ்,

படம்: ஜெ.பிரவின்குமார்