ராவ் மருத்துவமனை சார்பில் குழந்தையின்மை குறித்த இன்சைட் 2017 என்னும் சர்வதேச கருத்தரங்கம்

ராவ் மருத்துவமனையின் சார்பில் குழந்தையின்மை, இண்டோஸ்கோப்பி மற்றும் ஹைரிஸ்க் பிரக்னன்சி குறித்த இன்சைட் 2017 என்னும் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஹிஸ்டிரோஸ்கோப்பி பயிலரங்கம் மற்றும் அசிஸ்டெட் ரீப்ரொடக்டிவ் டெக்னாலஜி பயிலரங்கம் ஆகியன வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் பாப்பீஸ் ஹோட்டலில் கோவை அப்ஸ்டட்ரிக்ஸ் அன்டு கைநகாலஜி சொசைட்டி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேப்டர் ஆஃப் அசிஸ்டெட் இந்தியன் சொசைட்டி ஃபார் அசிஸ்டெட் ரீப்ரொடக்ஷன் (TAPISAR) மற்றும் எண்டோஸ்கோப்பி மற்றும் இன்ஃபெர்ட்டிலிட்டி கமிட்டி ஆகியவற்றின் சார்பில் நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சையில் நிபுணர்களாக விளங்கும் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள் என்று இன்று (26.10.17) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட  டாக்டர்.எஸ்.ஆர்.ராவ், தலைவர், டாக்டர்.ஆஷா.ஆர்.ராவ், மருத்துவ இயக்குனர்,டாக்டர். தாமோதர் ராவ் மற்றும் தீபிக்க ராவ் தெரிவித்தனர்