சமந்தா கல்விதிட்டப் புத்தகம் வெளியீடு

உலக அளவில் வன்முறையிலிருந்து விடுபட்டு, தலைமை பண்பை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்க்கும் சமந்தா கல்வி திட்டப் புத்தகம் கோவையில் இன்று (25.10.17) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமந்தா என்பது என்ன அனைத்து குழந்தைகளின் பாலினத்துக்கும் அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றுகிறது சமந்தா, ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கருத்துகளை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இதன் நோக்கம் வன்முறையிலிருந்து விடுபட்டு, சரிசமமாக சமுதாய பணிகளில் பங்கேற்று தலைமை பண்பை வளர்த்து உலகில் இளம் தலைவர்களாக உருவாக்க வேண்டும். சமந்தா இதற்கான கல்வி திட்டங்களை உருவாக்கி மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குழந்தைகளின் தன்மையை மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.