ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூரின் “நெல்லிக்கனி திட்டம்”துவக்கம்

ரோட்டரி கிளப் கோயமுத்தூரின் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக, “நெல்லிக்கனி திட்டம்” இன்று (16.10.17) குனியமுத்தூர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமலாக்குவதில் பங்குதாரராக ரூட்ஸ் குரூப்ஸ் ஆப் கம்பெனிகள் இயக்குநர் டாக்டர் கவிதாசன் செயல்பட்டு வருகிறார்.

நெல்லிக்கனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் ஊட்டுவதுதான். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோவை தலைவர் MPHF சந்தியாகு ஜேசு, ரோட்டரி கிளப் ஆப் கோவை செயலாளர் ஜோதிஸ் என்.பிள்ளை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் (ஓய்வு) கே.தேவராஜன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானமூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.