அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு

கோவையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் அண்ணா மார்க்கெட்டை மறுபரிசீலனை செய்து தினசரி மார்க்கெட்டில் கடை நடத்தி வியாபாரம் செய்திட அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை தினசரி மார்க்கெட் உள்ளிட்டவைகள் சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால் தற்காலிகமாக கல்லூரி மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளில் காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் அண்ணா தினசரி மார்க்கெட்டை மறு பரிசீலனை செய்து சாய்பாபா காலனி தினசரி மார்க்கெட்டினை சீரமைத்து சமூக இடைவெளியுடன் மீண்டும் கடை நடத்தி வியாபாரம் செய்யவும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.