பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாட்டில் 13 கோட்டமாக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இணைய வழியில் கோவை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை நகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநகர தலைவர் நந்தகுமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், கோவை கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ், வடக்கு மாவட்ட செயலாளர் பிரபா, தேசிய பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் ஏபி முருகானந்தம், இராணுவ பிரிவு மாநில தலைவர் கர்னல் பாண்டியன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனாட்சி அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதில் ஆறு தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.