கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை சலுகைக¢ கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது: பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி (வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக் காம்புகளில் கசிவு, மார்பகக் காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தாலோ, இரத்த சம்பந்தமான உறவில் யாருக்கேனும் மார்பகபப் புற்றுநோய் இருந¢தாலோ உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலைகட்டிகளைக¢கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்து விடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையைப் போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களைக¢கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்துவிட்டது. பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று கூறினார்.

கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிச்சாமி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்பகப¢ புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலுகைக் கட்டணத்தில் பெண்களுக்கான மார்பகப¢ பரிசோதனைகளையும், இலவச ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கு, 98940 08800, +91 422 4324151,

E-mail: drrupa@kmchhospitals.com.