இந்தியப் பேரரசர் முதலாம் பாஜிராவ் பிறந்த தினம்

பாஜிராவ் 1700 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று, பாலாஜி விஸ்வநாத்தின் மகனாக பிறந்தார். இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்தித்திராதவர்.

பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தக்காணத்தின் ஆறு மாகாணங்களில் சௌத் வரி மற்றும் சர்தேஷ்முகி வரி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமை முகலாயர்களிடமிருந்து இவர் மூலம் மராத்தியர்கள் பெற்றனர்.

காசி பாய், மஸ்தானி ஆகியோர் இவரது துணைவிகள். இவருக்கு நானாசாகிப் ரகுநாத ராவ் கிருஷ்ணாராவ் என 3 குழந்தைகள் பிறந்தனர்.

பாஜிராவ் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு 1740 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் மறைந்தார்.

பாஜிராவ் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து சனவரி 2007 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர் வெளியானது.