பார்த்தீனியம் இல்லாத வளாகமாக மாறப்போகும் வேளான்மை பல்கலைக்கழகம்

பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை செடிகள். இக்களைச்செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பலவிதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்திகின்றது.

எனவே, மத்திய அரசானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேளாண் பல்கலைக் கழகத்தின் உழவியல் துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வந்துள்ளது. இந்த வருடமும் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தின் முதற்கட்டமாக இன்று (18.8.2020) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் விஞ்ஞானிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் ஆகியோருடன் இணைந்து வயல்வெளிகளில் பார்த்தீனியச் செடிகளை அப்புறப்படுத்தினார்.

பின்னர், அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களிடம் பார்த்தீனியம் இல்லாத வளாகமாக மாற்றவேண்டும் என அறிவுரைகள் கூறினார். மேலும், பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியச் செடியினை கண்டறிந்து அளிப்பதர்காக எல்லா தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கவசங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் தலைவர் சின்னமுத்து, பல்கலைக்கழக உழவியல் துறை இணைப்பேராசிரியர் – முதன்மை விஞ்ஞானி (களை மேலாண்மை) முரளி அர்த்தனாரி , மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் பாரதி, மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.