போட்டி தேர்வுகளை  எதிர்கொள்வதற்கு பாடக்குறிப்புகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1,2 மற்றும் 4, வங்கிப் பணியாளர்கள் தேர்வாணையம் (BANKING) மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) ஆகிய போட்டி தேர்வுகளை மாணவ மாணவியர்கள் எதிர்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து பாடக்குறிப்புகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய “மெய்நிகர் கற்றல் இணையத்தளம் (VIRTUAL LEARNING WEBSITE)” செயல்பட்டு வருகிறது.

தொலைதூர கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், இருந்த இடத்தில் இருந்தபடி, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய விரும்புவோர், பயன் பெற, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் tamilnaducareerserices.tn.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்த இணையத்தளத்தில் அறிவுக்கூர்மை, பொது அறிவியல் (இயற்பியல், வேதியல், தாவிரவியல், விலங்கியல்), சமூக அறிவியல், இந்திய அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம், பொது ஆங்கிலம், பொதுத்தமிழ், சைவம், வைணவம், பகுத்தறிவு கணிதம், மற்றும் நடப்பு நிகழ்வுகள் என பல தலைப்புகள் வாரியாக, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகளும் ஏராளம்.

எனவே அரசு வேலை விரும்பும் இளைஞர்கள், இணையத்தளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, சேவைகளை இலவசமாக பெற்று பயன் பெறலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.