61 வருட அர்ப்பணிப்பு : கமலுக்கு சேரன் பாராட்டு

தமிழ் சினிமாவில் நீங்காத இடம்பிடித்த நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தமிழ் திரையுலகிற்கு வந்து 61 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 61 வருடங்களில் தமிழ் சினிமாவில் இவர் காட்டிய ஈடுபாடுகள் மற்றும் மாற்றங்கள் ஏராளம். இதை பாராட்டும் விதமாக இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது, “திரை வாழ்வில் 61வருடங்கள் அர்ப்பணிப்பு…  தமிழ் மொழி தொடங்கி பெரும்பாலான  இந்திய மொழிகளில் நடிப்பில் அனைவருக்கும் சவாலாய் நின்ற கம்பீரம்.. கலைஞனாய் எல்லோர்க்கும் முன்னோடியாய் சிந்தித்த கமல் சார்… பிரமிப்போடு தலைநிமிர்ந்து பார்க்கிறேன் உங்கள் உயரத்தை..” என்று குறிப்பிட்டு இருந்தார்.