புதிய படைப்புலக ராணி எனிட் பிளைட்டன் பிறந்த தினம்

குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் இவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.

இவரது கவிதைகள், கதைகள் 1921 ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.

‘மாடர்ன் டீச்சிங்’, ‘விஷ்ஷிங் சேர்’ தொடர், ‘தி ஃபேமஸ் ஃபைவ்’, ‘சீக்ரட் செவன்’, ‘லிட்டில் நூடி சீரிஸ்’ ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.

தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968 ஆம் ஆண்டு மறைந்தார்.