பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் “கவசா – தடுப்பூசி மையம்”

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில், அனைத்து வயதினருக்குமான  தடுப்பூசி மையத்தை கவசா – தடுப்பூசி மையம் புதிய திட்டத்தின் மூலம் கொண்டு வந்துள்ளது. இதனை பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன் துவங்கி வைத்தார்.

கோவையில் பிஎஸ்ஜி மருத்துவமனை ஏற்கனவே, வீட்டிற்கே சென்று இரத்த மாதிரிகளை சேகரிக்கும் “மித்ரா” எனும் திட்டத்தையும், நாடு முழுவதும் மருந்து மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் “சஞ்சீவனி” திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த திட்டங்களை தொடர்ந்து, தற்போது “கவசா” எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து வயதினருக்குமான  தடுப்பூசி மையத்தை  அறிமுகப்படுத்துகிறது.
கோவை அவிநாசி சாலை , பீளமேடு பகுதியில் உள்ள “பிஎஸ்ஜி மை கிளினிக்-ல்” இந்த தடுப்பூசி மையம் செயல்படவுள்ளது. இந்த கவசா திட்டமானது பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள அனைவரும் அந்தந்த வயதிற்கு, அந்தந்த கால கட்டத்திற்கு  தேவையான தடுப்பூசிகளை போட்டு நலமுடன் வாழ உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும்.