கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடி கண்டனம்

சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து ஆபாச கருத்துடன் கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ முருக பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருப்பர் கூட்டத்தை எதிர்த்து பல்வேறு கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது பாஜகவின் சார்பில் வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடி கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் அவர்களின் வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடல் பாடி கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தார்.