வ.ஊ.சி பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று  33 குட்டிகளை ஈன்றது

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட  பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டி போடும் இனத்தை சேர்ந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 33 குட்டிகளை ஈன்று உள்ளது. இது குறித்து பூங்கா இயக்குநர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில், 33 குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், இதனை சில நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளதாக கூறினார்.

மேலும் இங்கு சாரை, நாகம், பச்சை பாம்பு, மலை பாம்பு உள்ளிட்ட 34 வகையான பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.