கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் ஈட்டன் நிறுவனம்

ஈட்டன்  இந்தியா அறக்கட்டளையானது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ளது.  ஈட்டன் இந்தியா அறக்கட்டளையானது பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுக்கு தங்களது ஊழியர்களுடன் உதவிசெய்து வருகிறது.

கூலி தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையானது பல்வேறு நகரங்களில் உள்ள  போலீசாருடன் இணைந்து பணியாற்றி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார கருவிகளையும் வழங்கி வருகிறது.

இது குறித்து ஈட்டன் இந்தியா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆசிஷ் கபூர் கூறுகையில், நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், இருப்பிடம் மற்றும் தொலைதூர பணி சூழல்களில் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நாங்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

சமுதாய சேவைக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்னின்று பணியாற்றும் மக்களை ஆதரிப்பது என்பது எங்களின் முக்கிய பொறுப்பாகும். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மற்றவர்களுக்கு உதவுவதற்காக எங்கள் உறுப்பினர்கள் நிதி வழங்கி இருப்பது அவர்களின் மனித நேயத்தை காட்டுகிறது. எங்கள் நிறுவனம் என்றும் இந்த சமுதாயத்திற்கு உண்மையான உறுதிப்பாட்டுடன் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.