மதுக்கரையில் புதிய பாலம் மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய தார்சாலை திறப்பு

மதுக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய தார்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

மதுக்கரை சிறப்பு நிலை பேரூராட்சியில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பாலம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பீட்டிலான தடுப்பு சுவருடன் கூடிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை இன்று (05.08.2020) அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்துபேசிய அமைச்சர், கிராமப் பகுதிகளும், நகரப் பகுதிகளுக்கு இணையாக மேம்பாடு அடையவும், சாலை, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடையவேண்டுமென பல்வேறு முன்னோடித் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மதுக்கரை பேரூராட்சியில், மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து குரும்பபாளையம் ரோடு செல்லும் பகுதியில் ஓடைபள்ளம் அமைந்துள்ள இடத்தில் மழைக் காலங்களில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் நடந்து செல்லவும், போக்குவரத்து வாகனங்கள் கடக்கவும் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து குரும்பபாளையம் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதியபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அது போலவே, மதுக்கரை பேரூராட்சிக் குட்பட்ட வார்டுஎண்.18 மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் பாதையில் மேம்படுத்தப்பட்ட தார்சாலை அமைக்க இப்பகுதி மக்களாலும் பல்வேறு பகுதியிலிருந்து தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களாலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.1கோடி மதிப்பீட்டில் தடுப்புச் சுவருடன் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மதுக்கரை பேரூராட்சியில் அமைக்கப் பட்டுள்ள புதிய பாலம் மற்றும் தடுப்புச் சுவருடன் கூடிய தார்சாலை ஆகியவை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விருபணிகளையும் மேற்கொள்ள சிறப்பு முயற்சி மேற்கொண்டு தமிழ்நாடு நகர் புறசாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சிறப்பு ஒதுக்கீடு பெற்று இவ்விருபணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தொடர் மழையால் ராஜவாய்க் கால் நீர் வழிப்பாதையில் தண்ணீர் செல்லும் வழியினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், நொய்யல்ஆற்றில் நீர் நிரம்பி செல்லுவதையும் அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.