மழை காரணமாக ஆயிரக்கணக்கில் சரிந்த வாழை மரங்கள் வேதனையில் விவசாயிகள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் கனமழை காரணமாக மரங்கள் சார்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தொண்டாமுத்தூரை அடுத்த சாடிவயல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் தமிழக அரசிடம் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.