மீண்டும் ஐபிஎல் பயிற்சியில் சுரேஷ் ரெய்னா

இந்தியாவில் மற்ற நாடுகளில் இல்லாத அளவற்ற அன்பு கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிடும் பொழுது ஒன்று கூடும் ரசிகர்கள், ஐபிஎல் வந்தால் போதும் உள்நாட்டு போராளிகளாக மாறி ஒருவருடன் ஒருவர் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

வருடா வருடம் கோடை விடுமுறையில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணத்தால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பயிற்சிகள் தொடங்கபட்டிருந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அடுத்த மாதம் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் டெல்லி காஸியாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது பயிற்சியை துவங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, கொரோனா ஊரடங்கில் 4 முதல் 5 மாதங்கள் சென்றதால் தற்பொழுது பயிற்சிகள் கட்டாயமாக தேவைப்படுகிறது. தற்பொழுது டோனி கூட 4 மணி நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தீவிர பயிற்சியுடன் பிட்னெஸ் அவசியம் தேவைப்படுகிறது.

உடலும், மனமும் வலிமையாக இருந்தால் எதைப்பற்றிய கவலையும் இருக்காது. அதற்காக உடலையும், மனதையும், ஆரோக்கியத்துடன் உற்சமாக வைத்துள்ளேன். மீண்டும் இந்த களப் போட்டியில் எனது குடும்பத்தையும், ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்வேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.