இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா பிறந்த தினம்

பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார்.

ஆந்திரப்பிரதேசத்தில் இவர் வைரச்சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் வைரம் வெங்கய்யா என்று அழைக்கப்பட்டார்.

கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றதை பார்த்து, நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார்.

பிறகு அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.

நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 1963 ஆம் ஆண்டு மறைந்தார்.