அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தின புகழாஞ்சலி

கோவை நாச்சிபாளையம் பகுதியில் தீரன் சின்னமலையின் 215 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழாஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று 215 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், தீரன் சின்னமலை புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் அமமுக மதுக்கரை ஒன்றிய செயலாளர் சண்முகம்,  நாச்சிபாளையம் நாகராஜ், மாவட்ட செயலாளர் ரோகினி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சக்திவேல், மாணவரணி வெங்கடேஷ், கீதாஞ்சலி, இளைஞரணி ஜெயக்குமார், மதுக்கரை ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.