மாநகராட்சி துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி துணை ஆணையராக மதுராந்தகி கடந்த மாதம் 10ம் தேதி பதவியேற்ற நிலையில்  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இவரின் உதவியாளருக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று உறுதியாகியது. இதனை தொடர்ந்து தன்னைத்தானே தனிமப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் கார் டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.