டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கோவை மாநகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட், சண்முகா தியேட்டர் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் டெங்கு கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யும் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி. உடன், மத்திய மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாகராட்சி அலுவலர்கள்.