அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்

முதல்வர்

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு முடித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவலலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பரவல் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிலும் நியாய விலைக் கடைகளில் அத்திவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது.

அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும் என்றார்.