பிச்சைகாரன் 2 படத்தின் ஃபஸ்ட் லுக்

தமிழில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 45வது பிறந்தநாளை இன்று (24.7.2020) கொண்டாடுகிறார்.

இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படமான பிச்சைகாரன் 2 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். மேலும் இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக உள்ளது.

இப்படத்தை தேசிய விருது பெற்ற “பாரம்” படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக, விஜய் ஆண்டனி இசைமைக்கிறார். இப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.