கந்தசஷ்டி புத்தகத்தை வழங்கி அதன் சிறப்புகளை கூறிய திரைப்பட இயக்குனர்

கோவையில் திரைப்பட இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பொது மக்களுக்கு கந்த சஷ்டி கவச புத்தகத்தை  வழங்கி அதன் சிறப்புகளை எடுத்து கூறினார்.

அண்மையில் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை இழிவாக விமர்சனம் செய்தவர்களை கைது செய்ய கோரியும், இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குநரான ரேஸ் கோர்ஸ் ரகுநாத் கந்தசஷ்டி கவச பாடல் புத்தகத்தை பொது மக்களுக்கு வழங்கி பாடலின் உண்மை தன்மையை அறிய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளளார். கோவை ரேஸ் கோர்ஸ் வழியாக  செல்பவர்களுக்கு கந்தசஷ்டி பாடல் புத்தகத்தை வழங்கி அந்த பாடலின் சிறப்புகளை அவர் எடுத்து கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறுபடை வீடு கொண்ட தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவச பாடல்களின் சிறப்பை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் அனைவருக்கும் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இதன் சிறப்பை பல்வேறு தரப்பினர் கூறி வந்தாலும் அனைவரும் இதனை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.