Google CEO சுந்தர் பிச்சை பிறந்த தினம்

தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

இவர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணைத் தலைவராகவும், Chrome and Apps -இல் மூத்த துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Apps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும், கூகுளின் தயாரிப்புத் துறையில் தலைமைப் பொறுப்பில் (Product chief) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.