உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.

பெருகிவரும் மக்கள்தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.