நகைத் தொழில் பணி செய்ய அனுமதி வழங்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

நகை பட்டறை தொழிலில் 10 க்கும் குறைவான தங்க நகை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் பெருநிறுவன ஜீவல்லரி அதிபர்களின் தங்க நகை உற்பத்தி கிடங்கில் வடமாநில பொற் கொல்லர்கள் சுமார் 220 க்கும் மேற்பட்டோர்களை பணியமர்த்தி வேலைசெய்யும் போது 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியது, இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் யாரும் பணி செய்யக்கூடாது என கோவையில் சுமார் இருபத்தையாயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டது. தொடர்ந்து குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கிய பத்துக்கும் மேற்பட்ட தங்க நகை பட்டறையில் தங்க நகைகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்க கூட்டமைப்பின் கோவை மாவட்ட பொறுப்பாளர் கமலஹாசன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில்,10க்கும் குறைவான தங்க நகை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்கள் அனுமதி அளிக்கும் வகையில் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வேலையில்லாமல் தவித்து வரும் ஏழை நகை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடன் கோவை தங்க நகை கூட்டு குழுமத்தின் இயக்குநர் சண்முகம் மற்றும் சபரிகிரீஷ், மணி உட்பட சமூக சங்கங்களின் உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.