நோய் எதிர்ப்பு சக்திக்கு நெல்லிக்காய்

சித்த மருத்துவர் சிவராமன்

கொரோனா இந்த நூற்றாண்டின் கொடிய வைரஸாக உலக மக்கள் அனைவராலும் பார்க்கபடுகிறது. ஆனால், ஏற்கனவே நல்ல பாக்டிரியாக்கள், வைரஸ்கள் கோடிக்கணக்கில் நமது உடலில் உள்ளன. இந்த கொரோனாவும் கொஞ்ச நாள் நம்முடன் இருந்து விட்டு எதுவும் செய்யாமல் சென்றுவிட்டாலே போதும்.

இந்த கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவர் சிவராமன் சில குறிப்புகளை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, மற்ற வைரஸ்களைப்போல் இதனையும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், நமது உடல் அதற்கேற்றதுபோல் இருக்க வேண்டும். அதற்கு காலையில் இஞ்சி எலுமிச்சை ஜூஸ் அருந்தி வர வேண்டும். அதாவது, 5 மில்லி இஞ்சி ஜூஸ், 5 மில்லி எலுமிச்சை ஜூஸ், 150 மில்லி வெதுவெதுப்பான தண்ணிர் சேர்த்து குடிக்கலாம்.

இரவு சுக்குமல்லி காப்பி, பகல் பொழுதில் (ஒரு 11 மணி) முடிந்தால் குறைந்தது 2 காய் பயன்படுத்தி நெல்லிக்காய் ஜூஸ், வாரத்தில் 2 நாள் நிலக்கடலை அல்லது சுண்டல் சாப்பிடலாம்.

இதிலெல்லாம் என்ன உள்ளது என்றால் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பு மருந்தாக தற்பொழுதும் வழங்ககூடியது ஜிங்க், ப்ரோடீன், வைட்டமின் C, & D மாத்திரைகள் தான் வழங்கப்படுகிறது.

இந்த நோய் எதிப்பு தடுப்பு மருந்துகள் எல்லாம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் இஞ்சி, எலுமிச்சை, நெல்லி, நிலக்கடலை, சுண்டல் ஆகியவைகளில் உள்ளது.

எலுமிச்சை மற்றும் நெல்லியில் வைட்டமின் C உள்ளது. இந்த கொரோனா காலத்தில் ஒளவையார் இருந்திருந்தால் அதியமான் நெல்லியைத்தான் நோய் தடுப்பு மருந்தாக கொடுத்திருப்பார். அந்த அளவிருக்கு நெல்லியில் சத்துக்கள் உள்ளன.

நெல்லிக்காயை சாறெடுத்து அல்லது அப்படியே சுவைத்து சாப்பிட்டால்தான் அதன் முழு நமக்குக் கிடைக்கும். இதனை ஊறுகாய் போட்டு சாப்பிட்டால் ஒரு துளி கூட பலன் அளிக்காது.

இதுமட்டுமல்ல மாதுளை, வாழைப்பழம், சிவப்புக் கொய்யா போன்ற பழ வகைகளும் சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் ஆகியவைகளை கொடுக்கக்கூடிய வைரஸ்களை இஞ்சி தடுக்கிறது.

இதுவரை இஞ்சியை வயிற்றை சுத்தம் செய்கிறது என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் இது எத்தனையோ கொடிய வைரஸ்களில் இருந்து நம்மைக் காப்பாற்றி வந்துள்ளது.

இஞ்சி சாறு, சுக்குமல்லி காப்பி இவைகளெல்லாம் வைரஸ்கலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ப்ரோடீன் நோய் எதிர்ப்பு சத்துகளில் மிக முக்கியமான ஒன்று. அதிலும் நிலக்கடலையில் ப்ரோடீனுடன் ஜிங்க் மற்றும் செலினியமும் உள்ளது. இவைகள் அனைத்தும் நம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய பொருட்கள்தான். இதில் உள்ள சத்துகள் கொண்ட மாத்திரைகள்தான் தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகளாக பயன்படுத்தி வருகின்றது என்றார்.