அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தேர்வுகள் மற்றும் வகுப்புகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுப்பது ஓரளவு கைகொடுத்துள்ளன.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வரும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மறுதேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்காக மறுதேர்வு தேதியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.