இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி பிறந்த தினம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of the off side) என அழைக்கப்படுகிறார்.

இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார்.