அகஸ்டா மென்பொருள் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களுக்கு இடையான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்வி குழுமம், தொழில் நிறுவனங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்குமான தொழில்நுட்ப தகவல்கள் பரவலாக்கும் (industry Institute Collaboration) முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (2.7.2020) கோவை மென்பொருள் நிறுவனமான அகஸ்டாவுடன் (Augusta Hitech Sot Solutions) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ரத்தினம் கல்வி குழுமம் மாணவ மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் பொழுதே நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள முடியும்

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி, செயற்கை நுண்ணறிவியல் ஆராய்ச்சிகள், புதிய தொழில்நுட்பங்களில் பல திட்டங்களை செயல் படுத்துதல் போன்ற அம்சங்கள் கிடைக்கப்பெறும்,

இந்நிகழ்ச்சிக்கு ரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் மதன் ஆ செந்தில் தலைமை தாங்கினார். அகஸ்டா நிறுவனத்தின் இயக்குனர் முரளிதரன் சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி நித்தியானந்தம், முதன்மை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மாணிக்கம் மற்றும் ரத்தினம் தொழில்நுட்ப வளாக முதல்வர் நாகராஜ், ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இத்துவக்க விழாவினை ஜூம் செயலியிலும், முகநூலிலும் நேரலையில் கண்டனர்.