மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள  மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள சுக்குக்காபி கடை அருகே நேற்றிரவு ஊருக்குள் ஒற்றை யானை நுழைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சப்தமிட்டும், பட்டாசுகளை வெடித்தும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பினர். ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.