அரசு கல்லூரியில் உலக சுற்றுலா தினம்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பாக உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ஏ.சரவணன், உதவி பேராசிரியர் ஜெ.ஜெயமணி, கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.நளினி, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையின் சுற்றுலா அதிகாரி பி.விஜயகுமார், கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் சங்க தலைவர் வி.சி. கிருஷ்ணராஜா, விஇஆர் அமைப்பு நிறுவனர் ஜெரோம் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையின் உதவி பேராசிரியார் டாக்டர் சங்கீதா இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.