உலக சுற்றுலா தினம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்ரிங் மற்றும் ஓட்டல் நிர்வாக துறை சார்பில் உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. ‘தி ரெசிடென்சி டவர்ஸ்’மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் ஜி.சங்கர நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் கல்லூரியின் முதல்வர்

டாக்டர்.கே.எம்.சின்னதுரை ஆகியோர்கலந்து கொண்டனர். கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி பூங்காவில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் தென் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார உடை அணிந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை இந்துஸ்தான் கல்லூரியின்  கேட்ரிங் மற்றும் ஓட்டல் நிர்வாக துறை தலைவர் டாக்டர் பிரேம்கண்ணா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.