தனிப்பட்ட கருத்தை சமூக பிரச்சனையாக்குவது தவறு

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு சில மாறுபட்ட முகங்கள் இருக்கின்றது. கஷ்டப்பட்டு நடிச்சாலும் சில நடிகர்கள் மட்டும் நம் மனதில் நீங்காமல் இருப்பார்கள். உதாரண மாக எம்.என். நம்பியார் நடிப்பை பார்த்து பலர் அவரை திட்டியது உண்டு. அந்த அளவுக்கு மக்கள்  மனதில் ஆழமாக இருந்த கதா பாத்திரங்கள் அவருடையது. அந்த வரிசையில் பார்த்தவுடன் ஒரு நிமிடம் நம்மை பயமுறுத்தும் அளவு க்கு நடித்து பெயர் வாங்கினவர் டேனியல் பாலாஜி. பல படங்கள் நடித்து கொண்டு பிசியாக இருக்கும் வேளையில், நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட விஷயத்தை காண்போம்.

எனக்கு சினிமா மேல் ரொம்ப நாளா இண்ட்ரஸ்ட் இருந்துச்சு. ஒரு நல்ல சிறந்த இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஒரு இயக்குநருக்கு என்ன தேவை என்று என் மனதில் சிந்தனை எழுந்தது. பிறகு சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் டைரெக்சன் கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அதற்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசியிக்கும்போது நடிக்க பலர் அழைத்தார்கள். சரி என்று முடிவு எடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். அதற்கு அப்புறம் என்னோட நடிப்பை பார்த்து பாராட்டினாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பல படங்களில் என்னை பார்த்திருப்பீர்கள்.

எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. சின்ன வயசுல ஒரு படம் விடாம பார்த்துருவேன். எங்க அம்மா நல்ல பழைய படங்கள் பெயர் சொல்லுவாங்க. அதை எல்லாத்தை யும் ஒன்னு விடாம பார்த்து இருக்கேன். அதுதான் இப்போ ஒரு நல்ல நடிகனா ஆக்கியிருக்குனு சொல்லலாம். அதே மாதிரி குறிப்பிட்ட நண்பர்கள் கிடையாது. நல்லது பண்ண நண்பர்கள் இருக்காங்க. கேட்டது பண்ண நண்பர்களும் இருக்காங்க. அதுனால என் வாழ்கை நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கு. என் மனசுல சந்தோஷமான விஷயம் என்னனா தமிழ் சினிமால நல்ல படங்கள் வர ஆரம்பிச்சு இருக்கு. அதுனால தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு போக பல கதவுகளை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்றது.

தமிழ் படம் பார்க்கும் ரசிகர்களும் தெளிவா இருக்காங்க, என்ன படம் பார்க்கலாம்? பார்க்க வேண்டாம்னு? அப¢படி அவங்க பண்ணும்போது தமிழ் சினிமாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அப்புறம் நான் ஒர்க் பண்ண இயக்குநர்கள் எல்லோரும் எனக்கு ரொம்ப ஸ்பெசல்னு சொல்லுவேன். எனக்கு என்ன மாதிரியான ரோல் கொடுத்தா நல்லா இருக்கும்னு தெரிஞ்சு கொடுப்பாங்க. நானும் அதுல என்னோட ஹார்ட் வொர்க் போடுவேன். கடைசியில மக்கள் என்ன பாராட்டவும் செஞ்சாங்க. அது இப்பவும் சந்தோஷமான தருணம் எனக்கு. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் படத்தைப் பார்த்துட்டு ‘மாமேதை பாலு மகேந்திரன்’ சார் பாராட்டினார். அதற்கு அப்புறம் வேட்டையாடு விளையாடு படம் பார்த்துட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொல்லி என்ன பாராட்டுனது என் மனசுல இன்னும் நிரந்தரமா இருக்கு.

எனக்கு எப்போவும் என் நடிப்புக்கு தீனி போடுற மாதிரி கதாபாத்திரம் கிடைக்கணும்னு ஆசைப்படுவேன். இப்போகூட வடசென்னை படம் பண்ணியிட்டு இருக்கேன். இயக்குநர் வெற்றிமாறன் வேற ஒரு லெவலுக்கு படத்தைக் கொண்டு போயிட்டு இருக்கார். இப்போ அந்த படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாது. படம் வெளியாகும்போது கண்டிப்பா என் ரோல் பேசப்படும். நான் கருத்து சொல்லுற அளவுக்கு இன்னும் சாதிக்கல. இருந்தாலும் மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு. எல்லோரும் திரை அரங்கத்துக்கு வந்து படம் பாருங்க. பலரோடு உழைப்பு ஒவ்வொரு படத்திலயும் இருக¢கு. நெட்ல பார்ப்பதை நீங்கள் எல்லோரும் தவிர்க்க வேண்டும். அப்பறம் நெட்ல இப்பல்லாம் நிறைய பேர் படங்களை விமர்சனம் பண்றாங்க. அது எந்த அளவுக்கு ஆரோக்கியம்னு சொல்ல முடியாது. ஒருத்தரோட தனிப்பட்ட கருத்த ஷோசியல் பிரச்னை ஆக்கி அதுல பேர் வாங்கிட்டு இருக்காங்க. அது நல்ல விஷயம் அல்ல. ஒரு படத்தை விமர்சனம் செய்வதற்கு ஒரு கட்டுக்கோப்பு உள்ளது. எந்த படம் எடுத்தாலும் அந்த படத்தை மொக்கை, நல்லா இல்லை, கடிப்படம்ன்னு சொல்லுறது தப்பான விஷயம் ஆகும். ஒவ்வொரு நடிகன் மனதில் ஒரு மாறுபட்ட நடிகன் இருப்பான். அதே மாதிரி ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ரசனை இருக்கின்றது. அதை மக்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாண்டியராஜ்