ராஜாவுக்கு நிகர் ராஜா தான்

இசை இல்லாத இடமே இல்லை. அதுவும் இவர் இசையில்லாத இரவு இல்லவே இல்லை. இவரில்லாத இசை இல்லை, இசை இல்லாத இவரில்லை. என்றும் ராஜா இளையராஜா.

பலரது கவிதைகளை விட இவரது இசைகள் பலரை மயக்க வைத்துள்ளது. இவரது பாடல்கள் பட்டியளிடமுடியாது. ஆயிரத்தை தாண்டி செல்லும் இவரது படங்களின் எண்ணிக்கை இவரது ஞானத்தை முழுவதும் அறிந்துகொள்ள உதவியது. உறக்கத்திற்காக ராஜா பாடலை போட்டு கேக்கும் பல 80ஸ், 90ஸ் கால ரசிகர்கள் இன்றும் இவரது பாடல்களை முனுமுனுத்து கொண்டு தான் இருகின்றனர்.

இவரது பாடல்களை வைத்து பலர் காதல் கொண்ட நிகழ்வும் இங்கே நடத்துள்ளது. அண்மையில் மெஹந்தி சர்கஸ் என்ற ஒரு காதல் படம் வெளியானது. அதில் கதாநாயகன் கதாநாயகியை ராஜாவின் பாடலை போட்டு தான் தன் காதலை வெளிபடுத்துவார். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், அந்த கதாநாயகி தமிழ் தெரியாத வடமாநில பெண். அவளையும் ராஜாவின் பாடல்கள் மூலம் வசியம் செய்துவிடுவார். அந்த படமே இவரது இசையால் தான் இயங்கியது.

காதல் இசைகளில் ராஜாவுக்கு நிகர் ராஜா தான். தென்றல் வந்து தீண்டும் போது எப்படி இருக்கும் என்பதை இசையால் வடிவமைத்திருப்பார். பல ஆண்டுகள் ஆயினும் இதன் இவ்வொரு வரியும் தாளமும் நினைவில் உள்ளது. காரணம் அந்த அளவிற்கு ஆழமான உணர்வை கொண்டது இந்த படலின் இசையை உருவாக்க இவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம் தான்.