கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

நீச்சல் உடை அணிந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. விமர்சனமும் வந்தது. சிலர் கிண்டல் செய்தனர்.

கவர்ச்சியான நீச்சல் உடையுடன் டாப்சி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இந்த டிரஸ் எதுக்கு? இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.

தன்னை அசிங்கமாக விமர்சித்த அந்த ரசிகருக்கு, ‘சாரி…. எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ‘ஓ.கே’வா? என்று நையாண்டி செய்து பதில் அளித்து இருக்கிறார். அசிங்கமாக திட்டிய ரசிகரிடம் ஆவேசப்படாமல் நைசாக பதிலடி கொடுத்துள்ள டாப்சிக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது.