கே.எம்.சி.எச் மெடிக்கல் சென்டரில் ஒரு நாள் நரம்பியல் தீவிர சிகிச்சை பயிற்சி கல்வி

கே .எம்.சி.எச் மெடிக்கல் சென்டரில் ஒருநாள் நரம்பியல் தீவிர சிகிச்சை பயிற்சி கல்வி (Emergency Neurological Life Support Course (ENLS) அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பணியில் உள்ள தீவிர நரம்பியல் சிகிச்சை மேலாண்மை துறை சார்ந்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

நரம்பியல் ரீதியான பாதிப்புகள், தலைக்காயம், பக்கவாதம், மூளை ஜவ்வு பகுதியில் ஏற்படும் பாதிப்பு போன்ற நோய்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.  சாலை விபத்து மற்றும் பக்கவாதம் போன்ற நரம்பு பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர  ஊனத்தை ஏற்படுத்துபவை. இந்திய சாலை, விபத்துக்களால் மட்டுமே 2-2.5% பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்துகின்றன. தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சையையும், நேரத்தையும் வீணாக்காமல் சிகிச்சை அளித்தால், இத்தகைய மரணங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். AHA, (American College of Surgeons) அமெரிக்கன் அறுவை சிகிச்சை கல்லூரி போன்றவை, சிகிச்சை முறைகளை முறைப்படுத்தி  வெற்றி கண்டுள்ளனர்.

இந்த பயிற்சி கல்வியில், விபத்து மூளை காயம், தண்டு வட காயம், ரத்தம் தடைபடுதல்,  காயமற்ற தீவிர நரம்பு தளர்ச்சி,  மூளையில் ரத்தக் கசிவு, ஆழ்ந்த மயக்கநிலைக்கு சென்ற நோயாளிகளிடம் அணுகு மூறை, மூளை வீக்கம், மற்றும் மாரடைப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இடம் பெற்றது. இந்த கல்வி,  தென்னிந்திய அளவில் உள்ள தீவிர நரம்பியல் சிகிச்சையில் துறையில் பணியாற்றுவோருக்கு பயனுள்ளதாக  இருந்தது.

இந்த கல்வி திட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்த தீவிர சிகிச்சை பிரிவு துறையினரை, கேஎம்சிஎச் துணைத்தலைவர் டாக்டர் தவமணி டி பழனிசாமி பாராட்டினார்.

இத்தகைய சர்வேதச, தேசிய அளவிலான தொடர் கல்வி பயிற்சி வகுப்புகள், பணியாளர்களின் அறிவை மேம்படுத்த வழி வகுக்கும். இந்த கல்வியையும் தொழில்நுட்பத்தையும் அன்றாட நிகழ்வில் அனைவரும் பயன்படுத்த வேண்டும்  என்று கூறினார்.