மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, வெள்ளக்கிணறு அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை திமுக சரவணம்பட்டி பகுதி பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வழங்கினார்.
ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வந்த பையாக்கவுண்டர், வெள்ளக்கிணறு அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கிருமிநாசினி, முகக் கவசம் (N95), கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இவருடன் மாவட்ட அவைத் தலைவர் வெ.நா. பழனியப்பன், அருள், சண்முகம், அரசூர் பூபதி, ரகுபதி, ஐடி’விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், சுப்பிரமணியன், ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.