வைரலாகும் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களில் நடன விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை குறும்படம் வாயிலாகவும், புகைப்படங்கள் வாயிலாகவும், மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் எண்ணற்ற முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் கல்லூரியின் பைன் ஆர்ட்ஸ் கிளப் இன் நாட்டியாஞ்சலி அணியின் சார்பாக, அக்கல்லூரியின் மாணவர்கள் பரத நாட்டியம் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பாடலில் பரதம் ஆடும் மாணவிகள், தங்களுடைய பரத நடனத்தின் மூலம் முக கவசம் அணிவது, கைகளை சோப்பின் மூலம் கழுவுதல், சோசியல் டிஸ்டன்ஸிங், வீட்டிலேயே தனித்து இருப்போம், விழித்திருப்போம் போன்ற விழிப்புணர்வுகளை நடன அசைவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
பரத நடனத்தின் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு அனைத்து சோசியல் மீடியாக்களிலும் வைரலாகி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் மாணவர்களை அனைத்து தரப்பு மக்களும், இந்துஸ்தான் குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பாராட்டினர்.