கணபதி பகுதி மக்களுக்கு இலவச உணவு பொருட்கள்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோவையின் அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.இதை தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவை நல்லாம்பாளையம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இந்த விழாவல் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டு கணபதி பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி மற்றும் உணவு 11 வகையான உணவு பொ௫ட்கள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் விஜய் அக்ரோ ஏஜன்சி மு௫கேஷ், பழனிச்சாமி மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர் .