யோகா நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்லூரி மாணவி

கொரோனா தொடர்பான யோகா விழிப்புணர்வு நடன வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் பயிலும் மாணவி வைஷ்ணவி சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். உடலை ரப்பர் போல வளைத்து யோகாசனம் செய்த வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் விழித்திரு! விலகி இரு! வீட்டில் இரு! என கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மயூரி உயிர் காக்கும் யோகாசனம் செய்தபடி மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல், விலகி இருத்தல், மனித நேயம் வளர்போம், வதந்திகளை நம்பாதீர் என யோகா நடனமாடியபடியே பதாகைகளை காண்பித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.கொரோனா தொடர்பான யோகா விழிப்புணர்வு நடன வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் பயிலும் மாணவி வைஷ்ணவி சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். உடலை ரப்பர் போல வளைத்து யோகாசனம் செய்த வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் விழித்திரு! விலகி இரு! வீட்டில் இரு! என கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மயூரி உயிர் காக்கும் யோகாசனம் செய்தபடி மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல், விலகி இருத்தல், மனித நேயம் வளர்போம், வதந்திகளை நம்பாதீர் என யோகா நடனமாடியபடியே பதாகைகளை காண்பித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.