பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ஊரடங்கை கழுகு பார்வையில் கண்காணிப்பு

தமிழக அரசு 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் அறிவித்து 4 நாள் முழு ஊரடங்கில் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடைபிடிக்காமல் வெளியில் சுற்றும் பொதுமக்களை போலீசார் டுரோன் கேமரா மூலம் கழுகு பார்வையில் கண்காணித்தனர்.

மேட்டுப்பாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் டுரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தனர். பொதுமக்கள் பலர் வீட்டில் இருக்க, கூடலூர் பகுதியில் உள்ள ஒரு காட்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் டுரோன் கேமராவைக் கண்டதும் தலை தெரிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு போலீசார் வரவும், தொடர்ந்து டுரோன் கேமரா அவர்களை துரத்த அவர்கள் கிடைக்கும் சந்துகளில் ஓடி தப்பினர். அதன்பின்பு போலீசார் கிரிகெட் விளையாடியவர்களை வடிவேலு காமெடியுடன் இணைந்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.