மன அழுத்தத்தில் இருந்து விடுபட பரதம் உதவும்

தற்போதைய கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பரதம் மன அழுத்தத்தில் இருந்து மகிழ்ச்சி கொடுக்கும் என கோவையை சேர்ந்த நடன கலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நடன தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடுப்படும் இத்தினத்தில் அனைத்து நாடுகளின் கலாச்சார நடனங்களின் சிறப்புகள் குறித்து நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொடிய மரணங்கள் மற்றும் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச நடன தினம் அனைவரது வீடுகளிலும் தனிநடன தினமாக அனுசரிக்கப்பட்டது.

இதில் கோவை இராமநாதபுரம் பகுதியில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளி சார்பாக சர்வதேச நாட்டியர்களின் நாள் கொண்டாடப்பட்டது. இதில் தற்போதைய சூழலின் அடிப்படையில் ஆன்லைனில் நடனம் கற்கும் மாணவிகள் வீடியோ வழியாக தங்களது நடனங்களை வெளிப்படுத்தினர். இது குறித்து நடன பள்ளியின் இயக்குனர் விதுஸ்ரீ மிருதுளாராய் பேசுகையில், இங்கு பயிலும் அனைத்து மாணவிகளும் உற்சாகத்துடன் மிகுந்த ஈடுபாட்டுடனும் பயில்வதாகவும், இப்போது நடக்கும் ஆன்லைன் வகுப்பிலும் அனைவரும் தவறாமல் பங்கேற்பதாகவும், பரத கலை அனைவருக்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து, மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவுவதாக அவர் தெரிவித்தார்.