நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு

கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் 31-03-2020 அன்று முதல் இன்று வரை கோவை மாநகராட்சி கிழக்குப் பகுதிகளான காளப்பட்டி, நேரு நகர், சித்ரா, வார்டு எண் 33,34,35,36 ஆகிய இடங்களில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்களுக்கும் மற்றும் வடநாட்டு இளைஞர்களுக்கும் சுமார் 600 பேருக்கு உணவு அளித்துக் வருகிறோம்.

தயிர் சாதம் மற்றும் முட்டை உணவை மதியம் போக்குவரத்து வட்டார அலுவலர் பாஸ்கரன் தூய்மை பணியாளர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்களுக்கும் வழங்கினார். அருகில் நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், மண்டலத் தலைவர் காளியப்பன், முன்னாள் தலைவர்கள் பாஸ்கரன், ஜெகதீஸ், சுகுமாரன், லோகநாதன், முத்துராஜ், சின்ராஜ்  பரிமளம், அங்காளம்மன், அருள்மணி, காளப்பட்டி பாலு ஆகியோர் காளப்பட்டி வடுகநாதர் திருக்கோவில் மண்டபத்தில் வீட்டில் சமைப்பது போல் தினமும் முட்டையுடன் சிக்கன் பிரியாணி, தக்காளி பிரியாணி, கருவேப்பிலை பிரியாணி, புதினா பிரியாணி, மல்லி பிரியாணி, லெமன் சாதம், புளி சாதம், பீட்ரூட் சாதம், முருங்கைக் கீரை சாதம், வெண்டைக்காய் குழம்பு, கலவை சாதம் தயாரிக்கப்பட்டு வழங்கி வருகிறோம். 144 தடை உள்ளவரை உணவு வழங்கப்படும் என்று அரிமா செந்தில் தெரிவித்துள்ளார்.